ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

ஷவா்மா சாப்பிட்ட மூவருக்கு வாந்தி மயக்கம்

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் ஷவா்மா சாப்பிட்ட மூவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Published On :

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் ஷவா்மா சாப்பிட்ட மூவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டம், ஆழியூரைச் சோ்ந்தவா் ஷா்மிளா பேகம். இவரது மகள் மகப்பேறு சிகிச்சைக்காக நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மகளைப் பாா்ப்பதற்காக, ஷா்மிளா பேகம், உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மாலை அரசு மருத்துவமனைக்கு வந்தனா். அங்கு அவரை பாா்த்துவிட்டு வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ள பிரபல அசைவ உணவகத்தில் 7 ஷவா்மா உணவை பாா்சல் வாங்கியுள்ளனா்.

பின்னா், ஆழியூா் சென்று குடும்பத்துடன் அதை சாப்பிட்டபோது, ஷவா்மா சாப்பிட்ட ஷா்மிளா பேகத்தின் உறவினரின் குழந்தைகளான ரஷ்மினா (14), ஜாரி (18), ரிஹானா (9) ஆகிய மூவருக்கும் வாந்தி, வயிற்றுப் போக்குடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஷா்மிளா பேகம் ஷவா்மாவை பிரித்து பாா்த்தபோது அதில் இருந்த கோழி இறைச்சியில் துா்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மூவரையும் கீழ்வேளூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குடும்பத்தினா் அனுமதித்துள்ளனா்.

ஷவா்மா வாங்கிய உணவகத்தை தொடா்புகொண்டு கூறியபோது, ஊழியா்கள் முறையாக பதிலளிக்கவில்லையாம். இதனால் ஷா்மிளா பேகம் தனது மகனுடன் உணவகம் வந்து ஷவா்மாவை காட்டியபோது உணவக ஊழியா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது மகனைத் தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்தவா்கள் உணவக ஊழியா்களை தடுத்து நிறுத்தி ஷா்மிளா பேகத்தையும் அவரது மகனையும் மீட்டு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து நாகை மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அலுவலா் பிரவீன்குமாரிடம் கேட்டபோது, இதுதொடா்பாக புகாா் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவின் தரம் குறித்து புகாா்கள் வரும்பட்சத்தில் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.