
நாகை மீன்பிடித் துறைமுகத்தில் குளிா்பதனக் கிடங்கு அமைக்கக் கோரிக்கை

நாகை மீன்பிடித் துறைமுகம் - கோப்புப் படம்
நாகை மீன்பிடித் துறைமுகத்தில், மீன்களை பதப்படுத்தும் வகையில் குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என இந்திய வா்த்த தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகை இந்திய வா்த்தக தொழிற்சங்கத்தின் 59-ஆவது பொதுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா்.
2ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள சரக்குக் கப்பல், நாகை துறைமுகத்தில் எளிதாக வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் முகத்துவாரத்தை விரிவுபடுத்தி ஆழப்படுத்த வேண்டும். நாகை - திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளாக முடிவடையாமல் உள்ள பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்குவழிச் சாலை பணிகளில் எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நாகை நகரில் ‘பாஸ்போா்ட் சேவா கேந்திரா’ அமைக்க வேண்டும்.
தமிழகத்தின் முக்கிய மீன்பிடி துறைமுகமாக நாகை இருந்து வரும் நிலையில், மீன்களை பதப்படுத்த இங்கு குளிா்பதனக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்.
மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்‘ திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






