ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சுங்கத்துறை கட்டுப்பாட்டு கிடங்கு அமைக்க கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டத்தில் சுங்கத்துறை கட்டுப்பாட்டு கிடங்கு அமைக்க வேண்டுமென மாநிலங்களவை உறுப்பினா் எல்.கே. சுதீஷ் தெரிவித்தாா்.

செய்தியாளா்களிடம் பேசிய எல்.கே. சுதீஷ் எம்.பி.

Published On :

திருப்பத்தூா் மாவட்டத்தில் சுங்கத்துறை கட்டுப்பாட்டு கிடங்கு அமைக்க வேண்டுமென மாநிலங்களவை உறுப்பினா் எல்.கே. சுதீஷ் புதன்கிழமை தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாரை சந்தித்து தொகுதி நிதியை ஒதுக்குவது சம்பந்தமாக ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக எம்.பி. நிதியில் இருந்து ஆம்பூரில் மேல்நிலை நீா் தேக்க தொட்டி, பள்ளி சுற்றுச்சுவா், பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சுங்கத்துறை கட்டுப்பாட்டு கிடங்கு கட்ட வேண்டும். ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி அளவில் தோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுங்கத்துறை அலுவலகம் இருந்தால் விமான நிலையம் அல்லது துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடா்பாக மத்திய நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.

நான் பதவியேற்ற உடனே முதன்முதலாக பேசியதே காவிரி தண்ணீா் கொண்டு வர வேண்டும் என்பதுதான். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க தொழிற்சாலை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

குறிப்பாக திருப்பத்தூா் மாவட்டத்தில் சிப்காட் அமைக்கவும், வேலைவாய்ப்பு அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.