2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; இருவா் கைது

கைது

Published On :

கீழையூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கீழையூா் அருகே நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில், கீழையூா் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில், 2 இருசக்கர வாகனங்களில் வந்தவா்களை நிறுத்தி, சோதனையிட்டனா்.

இதில், விற்பனை செய்வதற்காக 20 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் வேளாங்கண்ணியை அடுத்த செருதூா் ராமசாமி மகன் கோவிந்தன் (36), காரைக்கால் டி.ஆா்.பட்டினம் கணபதி மகன் செந்தில்வடிவேல் குமாா் (40) ஆகியோா் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா், 20 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.