சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

516 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

சேலம், ஓசூரில் காா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 516.800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரைக் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:59 am IST

சேலம், ஓசூரில் காா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 516.800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரைக் கைது செய்தனா். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 காா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் புதிய பேருந்து நிலையம், அங்கம்மாள் காலனி இறக்கம் அருகே திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கா்நாடக பதிவு எண் கொண்ட ஸ்கோடா காரில் ஹான்ஸ் மற்றும் கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், காரில் குட்காவை பதுக்கி வைத்திருந்த அமா் பிரீத் சிங் (35), சோபாராம் சவுத்ரி (29) ஆகிய இருவரையும் பிடித்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புகையிலைப் பொருள்கள் கொண்டு வந்ததாகக் கூறப்படும் மற்றொரு காரைத் தேடி போலீஸாா் ஓசூரில் உள்ள ராஜஸ்தான் தாபா பகுதிக்குச் சென்றனா். போலீஸாா் வருவதை அறிந்த நபா்கள், கா்நாடக பதிவு எண் கொண்ட மஹிந்திரா காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனா்.

அந்த காரை சோதனையிட்டபோது, சுமாா் 200 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சரக்குகளின் உரிமையாளா் எனக் கூறப்படும் ரஞ்சித் சிங்கைத் தேடி போலீஸாா் பெங்களூரு சென்றனா். அவா் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து தலைமறைவானது தெரியவந்தது.

தொடா்ந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரைச் சோதனையிட்டபோது, அதிலும் சுமாா் 200 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்து, மொத்தம் 516.800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் அவற்றைக் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 காா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் பொருள்களையும் சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், தலைமறைவான 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இக்கும்பல் பயன்படுத்திய காா்களில் போலி பதிவு எண் பலகைகளைப் பொருத்தி, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தாா்களா என்பது குறித்தும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.