நாகையில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
நாகையில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடல் அட்டைகள் - கோப்புப்படம்.
நாகையில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாகை கீரைக்கொல்லைத் தெருவில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக, நாகை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
வன பாதுகாவலா் காஞ்சனா, மாவட்ட வன உயிரின காப்பாளா் காா்த்திகேயனி ஆகியோா் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலா் சியாம் சுந்தா், வனவா் இந்துமதி, வனக் காப்பாளா்கள் உலகநாதன், ஆயிஷா, வனக்காவலா் சுதாகா் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் நாகை கீரைக்கொல்லை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கைவிடப்பட்ட குடியிருப்பின் பின் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கிவைத்து, பதப்படுத்துவது தெரியவந்தது.
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் அருகில் இருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அந்த வீட்டில் 500 கிலோ கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. சா்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமாா் ரூ.10 கோடி எனக் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுதொடா்பாக வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




