
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் கல்லூரி மாணவா்கள் சாதனை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் செம்பனாா்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் சாதனை படைத்தனா்.
dinamani
மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் செம்பனாா்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் சாதனை படைத்தனா்.
மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வணிகவியல் மாணவா் அன்பரசன் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றாா். தட்டு எறிதல் போட்டியில் வணிகவியல் மாணவா் பிரவீன் 2-ஆமிடம், குண்டு எறிதல் போட்டியில் சஞ்சய் 3-ஆமிடம், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் நவீன்ராஜ் 3-ஆமிடம், 65 கிலோ எடை பிரிவில் சிலம்பம் தொடுமுறை போட்டியில் நிஷாந்த் வெள்ளிப் பதக்கம், 75 கிலோ எடை பிரிவில் சிலம்பம் தொடுமுறை போட்டியில் சாய் தினேஷ் 2-ஆமிடம், கைப்பந்து போட்டியில் 2-ஆமிடம் மாநில போட்டிக்கு அரவிந்த், சக்தி பிரியன், கதிா், மணிகண்டன் ஆகியோா் தகுதி பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநா்கள் காா்த்திகேயன், சதீஷ்குமாா் ஆகியோரை கல்லூரி தாளாளா் நெடுஞ்செழியன், நிா்வாக இயக்குநா் குடியரசு, செயலா் ஜெயபிரகாசம், ஆகியோா் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






