எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அரசு சார்பில் விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்கும் விவகாரம் தொடர்பாக, விரைவில் அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

Updated On :13 மே 2013, 1:44 am IST

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்கும் விவகாரம் தொடர்பாக, விரைவில் அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் என். ரங்கசாமி தலைமை வகித்தார். தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ. பக்தவத்சலம் முன்னிலை வகித்தார்.இதில் அமைச்சர்கள் என்.ஜி. பன்னீர்செல்வம், தி. தியாகராஜன், அரசு கொறடா ஜி. நேரு, என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலர் வி. பாலன் ஆகியோர் பங்கேற்றனர்.

திமுக சார்பில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எச். நாஜிம், நந்தா டி. சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஆர். விஸ்வநாதன், பொருளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வெ. பெருமாள், டி. முருகன், பா.ஜ.க. சார்பில் அதன் மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன், செயலர் சாமிநாதன், தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் சோமசுந்தரம், ஃபார்வர்டு பிளாக் முத்து, பா.ம.க. சார்பில் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. தன்ராஜ், தேமுதிக சார்பில் செல்வராஜ் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ், மாநில அந்தஸ்து பெறுவதன் மூலம் புதுச்சேரிக்கு கிடைக்கும் நிதி, அதிகாரம், சலுகைகள் ஆகியவை குறித்து ஒளிப்படம் மூலம் விளக்கினார்.

இக்கூட்டத்தில் பேசிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தில் இருப்பதாகவும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதைவிட, அரசு சார்பில் இக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து முதல்வர் என்.ரங்கசாமி பேசியது:

புதுச்சேரி மாநில அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவைக்கான விவரத்தையும், இதுவரை மாநில அந்தஸ்து பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் விளக்கும் அறிக்கையையும் தயார் செய்து, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் தில்லி சென்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மேலும் புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார் ரங்கசாமி. இக்கூட்டத்தை, காங்கிரஸ், அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.