காரைக்காலில் கோலா மீன் சீசன் தொடங்கியுள்ளது. ஆனால், குறைந்த அளவிலேயே மீன்கள் வரத்து இருப்பதாக மீனவர்கள் கூறினர்.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோலா மீன் சீசன் காலம். ஆழ்கடல் பகுதியில் வசிக்கக் கூடிய, கூட்டமாக மேலெழும்பக்கூடிய வகையை சேர்ந்த கோலா மீன் சீசன் தற்போது தொடங்கியுள்ளதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாள்களாக அதிகாலை பைபர் படகு மூலம் கடலுக்குள் சுமார் 30 நாட்டிக்கல் மைல் தூரம் சென்று கோலா மீன்களை பிடித்துக் கொண்டு மாலையில் கரைக்கு திரும்புகின்றனர்.
""4 மீன்கள் ரூ. 20-க்கு விற்கப்படுகின்றன. மீன் வரத்து குறைவாக இருப்பதாலேயே இந்த நிலை. கூடுதலாக மீன் வரத்து இருக்குபட்சத்தில் ரூ. 20-க்கு கொடுக்கப்படும் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குறைவான அளவு வருவதால் காரைக்கால் தவிர பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை'' என மீன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கோலா மீன் வரத்து தொடங்கிய நிலையில், காரைக்காலில் சிறிய பைபர் படகுகள் மூலம் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதும் வழக்கம்போல், கோலா மீன்கள் பிடிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபடுவர் என தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








