திருவாரூர் மாவட்டம், திருக்கரவாசலில் அருள்மிகு ஆதிவிடங்கத் தியாகராஜ சுவாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி மே 15-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோவிலில் நிகழாண்டு வைகாசி விசாக பெருவிழா மே 14-ம் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. மே 15-ம் தேதி காலை 6 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறு கிறது. மாலை 6 மணிக்கு யாகசாலை தொடங்குகிறது. அடுத்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. மே 16 மாலை 5.30 மணிக்கு ஸ்ரீசந்திரசேகரர் பட்டம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, கைலாச நாயகிக்கு புஷ்ப அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மே 17-ம் தேதி தியாகராஜ சுவாமிக்கு மகாபிஷேகம், சுவாமி குக்குட நடனத்துடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்தடுத்த நாள்களில் சுவாமி வீதியுலா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மே 21-ம் தேதி சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தல், மே 23-ம் தேதி திருத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. மே 24-ல் விசாகத் தீர்த்தவா ரியுடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் ஆர். ஜெயக்குமார் (திருவாரூர்), டி. சிவக்குமார் (திருக்கரவாசல்) மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


