பிளஸ் 2 பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதி 1159 மதிப்பெண்கள் பெற்ற கண் பார்வை குறைபாடுடைய மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் பெசண்ட் நகரை சேர்ந்தவர் ஜோ பிரேரா மகள் பியானா பிரேரா. பார்வை குறைபாடு உள்ள இவர் பிளஸ் 1 வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துவிட்டு, பிளஸ் 2 தேர்வை தனித் தேர்வராக எழுதினார். இதில் அவர் 1200-க்கும் 1159 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரின் மதிப்பெண்கள்:
பிரெஞ்ச் - 194, ஆங்கிலம் - 182, பொருளாதாரம் - 198, அரசியல் அறிவியல் - 187, வணிகவியல் - 198, அக்கவுண்டன்ஸி - 200.
"கல்லூரி விரிவுரையாளராக விரும்புகிறேன். அதற்கேற்ற கல்வியை தேர்வு செய்து படிப்பேன்' என்கிறார் பியானா.
இதுகுறித்து மாணவியின் தந்தை கூறும்போது, பார்வை குறைபாடு உள்ள பியானா, பிளஸ் 1 வகுப்பில் கணினி அறிவியல் பாடம் எடுத்து படித்ததால், பிளஸ் 2 பொதுத் தேர்வை இந்தப் பாடத்தில் எழுதுவது கடினம் என பள்ளி நிர்வாகம் கூறியதால், தனித் தேர்வராக வேறு பிரிவை எடுத்து படித்தார். தற்போது 1159 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தனித் தேர்வர்களின் திறமையையும் அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றார்.
மாணவியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் காளிதாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


