சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்படுமா?

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் தற்போது வசூலிக்கப்படும்

News image
Updated On :29 அக்டோபர் 2013, 7:49 pm

ஏ. ரவி

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட, இருமடங்கு கட்டணம் நிர்ணயித்து முன்பதிவு செய்யப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

சென்னையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தங்கள் ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

அத்தகையோர் ரயில் பயணங்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டாலும் முன்பதிவில் சிலருக்கு மட்டுமே இடம் கிடைக்கிறது.

ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் பயணத் தொலைவை கருத்தில்கொண்டு அடுத்ததாக தனியார் ஆம்னி பேருந்துகளையே நாடி செல்கின்றனர். ஆனால்,பண்டிகைக் காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.

கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போதும் இதேநிலையே காணப்பட்டது.

அப்போது, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தலைமையிலான போக்குவரத்துத் துறை அலுவலர்கள் சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதியில் முகாமிட்டு, தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது,கூடுதல் கட்டணம் வசூலித்த சில ஆம்னி பேருந்து ஊழியர்களும், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர். நிகழாண்டில் தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியதுடன், இணையதளம் வாயிலான முன்பதிவையும் முடித்துவிட்டனர்.

உதாரணமாக, சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு ரூ. 950-1995 (சாதாரண நாள்களில் பழைய கட்டணம் ரூ.600-ரூ.690; ஏ.சி. பேருந்துகளில் ரூ.790-ரூ.970), திருநெல்வேலிக்கு ரூ.1120-ரூ.2000 (பழைய கட்டணம் ரூ. 640-ரூ.1050), தூத்துக்குடிக்கு 1100-1450(சாதாரண நாள்களில் ரூ. 670-ரூ.730), மதுரைக்கு 900-1900 (சாதாரண நாள்களில் ரூ. 350-ரூ.730), தஞ்சைக்கு

ரூ. 800-1100 (பழைய கட்டணம் ரூ. 350-630), பட்டுக்கோட்டை, மன்னார்குடிக்கு ரூ. 900-999(பழைய கட்டணம் ரூ. 360-ரூ.430),  திருவாரூருக்கு ரூ. 800-999 (பழைய கட்டணம் ரூ. 350-450) கட்டணமாக இணையதளங்கள் மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டு, ஆன்லைன் முன்பதிவு முடிக்கப்பட்டுவிட்டது. ஆம்னி பேருந்து பயணத்துக்கு கொடுக்கும் தொகையை, ஊருக்கு சென்று குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிக்கையையே கொண்டாடிவிடலாம் என கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு, கடந்த ஆண்டைபோல் நிகழாண்டிலும் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் மூலம் சென்னை மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தி ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தி, நியாயமான கட்டணத்தில் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேருந்து பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.