உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலப் பாதையில் காவல் அதிகாரி ஆய்வு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையை மத்திய மண்டல ஐ.ஜி. மு. ராமசுப்ரமணி திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்டக் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Published On :

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையை மத்திய மண்டல ஐ.ஜி. மு. ராமசுப்ரமணி திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்டக் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வரும் 22-ம் தேதி இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறவுள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையை மத்திய மண்டல ஐ.ஜி. மு.ராமசுப்ரமணி திங்கள்கிழமை பார்வையிட்டார்.ஊர்வலம் தொடங்கும் ஜாம்பவானோடை சிவன் கோவில், ஜாம்பவானோடை தர்ஹா, ஆசாத் நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், கொய்யாமுக்கம், ரயில்வே கேட் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் விநாயகர்சிலை கரைக்கும் இடமான செம்படவன்காடு பாமணியாற்றுப் பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, மன்னார்குடி சாலையில் உள்ள வனத்துறை ஓய்வு விடுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் த. ஜெயச்சந்திரன் (திருவாரூர்), எஸ். தர்மராஜ் (தஞ்சாவூர்), அபினவ் (நாகப்பட்டினம்), முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் அ. அருண், மன்னார்குடி கோட்டாட்சியர் செல்வசுரபி, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் பழனிவேல் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.