எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சந்தானராமர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச.29) வைகுண்ட ஏகாதசியையொட்டி,  அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:07 am

DIN

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச.29) வைகுண்ட ஏகாதசியையொட்டி,  அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.
சந்தானராமர் கோயில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல் பெற்றது. இக்கோயிலில் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் புத்திரப் பாக்கியம் இல்லாதவர்கள் அப்பேற்றினை அடைவார்கள் என்பது ஐதீகம். 
இக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து உத்ஸவம் டிச. 19- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 
வைகுண்ட ஏகாதசி: இக்கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச.29) அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. அப்போது, சீதா லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர் சொர்க்கவாசல் திறப்பில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு முதல் ராப்பத்து உத்ஸவம் தொடங்குகிறது. இதேபோல், ஆலங்குடி அபயவரதராஜர் பெருமாள் கோயில், நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளிட்ட வைணவக் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.