"மருத்துவ மாணவர்கள் தனித் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்'
மருத்துவ மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் கேட்டுக்கொண்டார்.


மருத்துவ மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் கேட்டுக்கொண்டார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கலை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்துப், பேசியது:
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவம் மட்டுமல்லாது, நடனம், ஓவியம், பாடல் என பல துறைகளிலும் பரிணமிக்க வேண்டும். எதிர்காலத்தில் தங்களுக்கென்று தனித் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களது அறிவை வளர்த்துக்கொள்ளும் மாணவர்கள், உடல் நலனிலும் அக்கறை செலுத்தவேண்டும். அத்துடன், சமுதாயத்துக்கு சேவை செய்யும் மனப்பக்குவத்துடனும் வளர வேண்டும்.
தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக, அமைதியான வாழ்க்கைக்கு இசை, நடனம், பாடல் இதில் ஏதேனும் ஒரு துறை அவசியம். மருத்துவ மாணவர்களின் தேர்ச்சி 95 முதல் 99 சதவீதம் வரை இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.
விழாவில், மாணவர் ஆலோசகர் சீனிவாசன், கலை மன்ற ஆலோசகர் டாக்டர் வினிதா, துணை முதல்வர் டாக்டர் சுமதி, துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில், மாணவர்களுக்கான இசைப் போட்டி, மருத்துவர்களுக்கான இசைப் போட்டி, தனி நடனம், குழு நடனம், குறும்பட போட்டி, இரட்டையர் பாடல், பேஷன் ஷோ போன்றவை நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை டாக்டர் பிருதிவிராஜ், டாக்டர் சோபனா ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...