சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரயில்வேயில் ஒருங்கிணைந்த திட்ட நேர மேலாண்மை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன்

திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற ஒருங்கிணைந்த திட்டநேர மேலாண்மை அமைப்பை ரயில்வே அமைச்சகம் உருவாக்க வேண்டும் என, தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:16 pm

DIN

திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற ஒருங்கிணைந்த திட்டநேர மேலாண்மை அமைப்பை ரயில்வே அமைச்சகம் உருவாக்க வேண்டும் என, தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அதன் துணைப்பொதுச் செயலாளர் மனோகரன், நீடாமங்கலத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ரயில்வே துறையில் ஏப்ரல் 2012 முதல் மார்ச் 2017- ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் 33 திட்டங்கள் மட்டுமே  நிறைவேற்றப்பட்டுள்ளன. திட்ட காலம் கடந்து ஓராண்டு முதல் 22 ஆண்டுகளாக 41 ரயில்வே திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இதனால் இதன் நிதி தேவை ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 49 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த ரயில்வே திட்ட நிதித் தேவையில் இது நான்கில் ஒரு பங்கு. கால விரையத்தால் ரூ. 65 ஆயிரத்து 500 கோடி கூடுதலாக இத்திட்டங்களுக்கு இப்போது தேவைப்படுகிறது.
நிதிப் பற்றாக்குறை பல திட்டங்களுக்கு முட்டுகட்டையாக இருந்தாலும், நில ஆர்ஜிதம், வழக்கு, வனத்துறை ஒப்புதல், ஏல நடைமுறை, பொறியியல் திட்டம், சட்டம் ஒழுங்கு, ஒப்பந்ததாரர்கள் பிரச்னை போன்றவை பல திட்டங்களின் காலதாமதத்துக்கு காரணமாக அமைகின்றன. இதனால், ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செலவிடாமல் அடுத்த திட்டங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. எனவே, ரயில்வே திட்டங்களின் காலவிரைய காரணிகள் களைய, கண்காணிக்க மற்றும்  திட்ட காலத்துக்குள் நிறைவேற்ற, ஒருங்கிணைந்த திட்டநேர மேலாண்மை அமைப்பை ரயில்வே அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.