மன்னார்குடி அருகே தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகள் வீடு திரும்பவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார்.
ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாப்பட்டைச் சேர்ந்த சு. ஞானபிரகாசம் மகள் ராஜாத்தி (28). ஆய்வு நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார்.
இவர், அக்.4-ஆம் தேதி, வடுவூரை அடுத்த மேல்நெம்மேலியில் உள்ள தனது கல்லூரி தோழி சரண்யா வீட்டுக்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். ஆனால், மீண்டும் வீடுக்கு திரும்பவில்லையாம்.
பெற்றோர் பல இடங்களில் தேடியும் ராஜாத்தியை கண்டுபிடிக்க முடிவில்லை. இதுகுறித்து, வடுவூர் காவல் நிலையத்தில் ஞானபிரகாசம் புதன்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.