வலங்கைமான் அருள்மிகு வரதராஜப்பெருமாளுக்கு திருவில்லிப்புத்தூர் அருள்மிகு ஆண்டாள் சூட்டிய மலர் மாலையை அணிவிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
வலங்கைமானில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயிலிலிருந்து ஆண்டாள் சூட்டிய மலர் மாலையை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று வரதராஜப் பெருமாளுக்கு அணிவித்து பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வர்த்தக சங்கத் தலைவர் என். பரதாழ்வார், செங்குந்தர் சாமி.கலியபெருமாள், ஆலங்குடி குருஸ்தல முன்னாள் அறங்காவலர் சா.குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, ஆலய நிர்வாகி என்.பாலு சுப்பிரமணியன், குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.