தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திராவிடர்கழகப் பொதுக் கூட்டம்

திராவிடர் கழக முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சாரங்கன் 22-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை திராவிடர்கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:03 am

DIN

திராவிடர் கழக முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சாரங்கன் 22-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை திராவிடர்கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு  கட்சியின்  நகரச் செயலர் மு.ராமதாசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தி.க. மாநில பொதுச் செயலர்கள் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர் சு.சிங்காரவேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.  இதில் மாவட்டத் தலைவர்கள் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், இரா.கோபால், மாவட்டச் செயலர் பெ.வீரையன், மாநில பகுத்தறிவாளர் ஆசிரியர் அணி அமைப்பாளர் பி.ரமேஷ், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் வை.கௌதமன், ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வம், நகரத் தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 முன்னதாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து, பாமணியில் உள்ள ஆர்.பி.சாரங்கன் நினைவு இடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.