47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தீபாவளி பண்டிகை: உணவகங்கள் இரவில் கூடுதல் நேரம்செயல்பட அனுமதிக்கக் கோரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி உணவகங்கள் இரவு நேரத்தில் கூடுதல் நேரம் செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என, மன்னார்குடி ஹோட்டல்

News image
Updated On :12 அக்டோபர் 2017, 11:10 pm

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி உணவகங்கள் இரவு நேரத்தில் கூடுதல் நேரம் செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என, மன்னார்குடி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, மன்னார்குடி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலர் தனம். நாராயணன், மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகனிடம் அளித்த கோரிக்கை மனு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மன்னார்குடியில் உள்ள ஹோட்டல்களை இரவு 11 மணி வரை திறந்து வைத்திருக்கலாம் என சாதாரண நாள்களில் உள்ள உத்தரவைத் தளர்த்தி, பொதுமக்கள், வர்த்தகர்களின் நலன் கருதி இரவு 1 மணி வரை கடையை திறந்து வைத்து, வியாபாரம் செய்ய தாற்காலிக அனுமதி அளிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மனு அளிக்கும்போது, சங்க பொருளாளர் எம்.பி. இராவணன், துணைத் தலைவர் ஆர். பாரதிதாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.