ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ரயிலில் திருடர்களை ஒடுக்க ரோந்துப் படை: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்

ரயில்வேக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், திருடர்களை ஒடுக்க தேசிய அளவில் சிறப்பு ரோந்துப் படையை உருவாக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

ரயில்வேக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், திருடர்களை ஒடுக்க தேசிய அளவில் சிறப்பு ரோந்துப் படையை உருவாக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் விடுத்த அறிக்கை:
ரயிலில் திருட்டு தொடர்பாக கடந்த 2008-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 11,497 புகார்கள் பதிவாகின. அடுத்த 5 ஆண்டுகளில் இது 49 விழுக்காடு அதிகரித்தது. 2013-ஆம் ஆண்டு பதிவான புகார்களின் எண்ணிக்கை 18,037. கடந்த 2017-ஆம் ஆண்டு 29,004 ஆக மேலும் அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில் பயணிகளின் உடைமைகள் திருட்டுப் போவது 156 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது.
ரயில்வேக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், இதுபோன்ற திருடர்களை ஒடுக்க தேசிய அளவில் சிறப்பு ரோந்துப்படை உருவாக்கப்பட வேண்டும் என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.