தந்தை- மகள் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு

கூத்தாநல்லூரில் தந்தை- மகளை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
Published on
Updated on
1 min read

கூத்தாநல்லூரில் தந்தை- மகளை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
சின்னக்கூத்தாநல்லூர் மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் எட்வர்ட் ஜெயராஜ் (43). இவரது வீட்டின் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன், விஷ்வா, விக்ரம் மற்றும் ராகவன் ஆகிய 4 பேரும் நின்றுகொண்டு, தகாத வார்த்தைகளால் எட்வர்ட் ஜெயராஜை திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து கேட்டபோது எட்வர்ட் ஜெயராஜையும், அவரது 14 வயது மகளையும் அக்கும்பல் தாக்கியதாகத் தெரிகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில், மேற்கண்ட 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.