திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மதுபோதையில், 2 வீடுகளைத் தீயிட்டு கொளுத்திய நாகசுர வித்வான் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
சின்னக் கூத்தாநல்லூர், மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் சேகர் (40). நாகசுர வித்வானான இவர், குடும்பத் தகராறு காரணமாக மதுபோதையில் தனது வீட்டின் கூரை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில், அவரது வீடு மட்டுமன்றி, அருகில் அருகில் உள்ள செல்வராஜ் என்பவரது கூரை வீடும் தீக்கிரையானது. துணிமணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் நாசமாகின.
இதற்கு காரணமான சேகரை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.