ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

"தூர்வாரும் பணிகள் குறித்து  வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'

தமிழகத்தில் நீர்நிலைகளைத் தூர்வார நிகழாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:39 am IST

தமிழகத்தில் நீர்நிலைகளைத் தூர்வார நிகழாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ரூ. 500 கோடி நிவாரண நிதி எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது. எனவே, கேரளத்தை தேசியப் பேரிடர் பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவித்து, தேவையான கூடுதல் நிதி மற்றும் உதவிகளை வழங்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேரளத்துக்கு இதுவரை ரூ.50 லட்சம் வரை நிதி உதவி செய்துள்ளோம். மேலும், கூடுதல் நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
 மேட்டூரிலிருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டும், காவிரி டெல்டா மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளுக்கும் முறையாக தண்ணீர் சென்றடையவில்லை. குடிமராமத்துப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, நீர் நிலைகளைத் தூர்வார தமிழக அரசு நிகழாண்டு ஒதுக்கீடு செய்த நிதி மற்றும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 
 குடிமராமத்துப் பணிகள் சரிவர செய்யப்படாததைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக. 28-ஆம் தேதி நடத்தப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.