காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திறனறி தேர்வுகளில் பங்கேற்க சிறப்பு பயிற்சி வகுப்பு

திருவாரூர் மாவட்டத்தில் திறனறி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது. 

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:41 am IST

திருவாரூர் மாவட்டத்தில் திறனறி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது. 
பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் 9 மற்றும் பத்தாம் வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களில் திறமை மிக்க மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேசிய திறனறித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட  உள்ளன.  வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை நாள்களில் இப்பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் திருவாரூர் மாவட்டத்தில் 2 மையங்களில் நடைபெறுகிறது. திருவாரூரில் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,  மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி நடைபெறுகிறது. இதில், 100 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். 
திருவாரூர் மையத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து பயிற்சியை தொடங்கி வைத்தார்.  இதில், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் க. கலைவாணன், பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் வ. ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். முதுகலை ஆசிரியர் கோ. கெளதமன், பட்டதாரி ஆசிரியர் எஸ். சக்திவேல் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். ஏற்பாடுகளை, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ. பாண்டியன் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.