மன்னார்குடி அருகேயுள்ள களப்பாலில் வயலில் மாடு மேய்ந்ததில் ஏற்பட்ட தகராறில், போலீஸார் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
களப்பால் அருகேயுள்ள நல்லநாயகிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி உஷா. இவர் வியாழக்கிழமை அதே பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாராம். மாடுகள் அருகில் பழனி என்பவரது வயலில் இறங்கிவிட்டதாம். இதையறிந்த, பழனி, உஷாவை தகாத வார்த்தைகளால் பேசி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உஷா கணவர் ரமேஷிடம் தெரிவித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த ரமேஷ், பழனி வீட்டுக்குச் சென்று பிரச்னை குறித்து பேசியபோது, இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் பழனி, அவரது சகோதரர் வெற்றி ஆகிய இருவரும் ரமேஷை உருட்டுக் கட்டையால் தாக்கியனார்களாம். இதில், காயமடைந்த ரமேஷ் (44) திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, களப்பால் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து பழனி (37), வெற்றி(34) ஆகிய இருவரை கைது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

தந்தையின் இறுதிச் சடங்குக்குக்கூட வராத 4 பிள்ளைகள்! இறப்புச் சான்றிதழ் கேட்டு சண்டை!

ஓடிடியில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய டாப் 10 படங்கள்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


