
புதிதாக ஊன்றிய மின்கம்பம் முறிந்து விழுந்ததில் தொழிலாளர் காயம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை புதிதாக ஊன்றப்பட்ட மின்கம்பம் முறிந்து விழுந்ததில், மின் வாரிய தற்காலிக தொழிலாளர் காயமடைந்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை புதிதாக ஊன்றப்பட்ட மின்கம்பம் முறிந்து விழுந்ததில், மின் வாரிய தற்காலிக தொழிலாளர் காயமடைந்தார்.
வடுவூர் அருகேயுள்ள முக்குளம் சாத்தனூர் என்ற கிராமத்தில் கஜா புயலின் சீற்றத்தால் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின் வாரியத்தினருடன், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்குளம் சாத்தனூரில் வயல்பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றிவிட்டு அந்த இடத்தில் புதிதாக வழங்கப்பட்டுள்ள மின் கம்பத்தை ஊன்றிய பின் அதன் உச்சிக்கு சென்ற தற்காலிக ஒப்பந்த தொழிலாளர் திருமக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்த பா. அமல்ராஜ்(50) என்பவர் மின்கம்பத்தில் மின்கடத்திகளை பொறுத்திக்கொண்டிருந்தபோது,திடீரென மின் கம்பம் தரை மட்டத்துடன் முறிந்து விழுந்தது. இதில், அமல்ராஜ் கீழே விழுந்து காயமடைந்தார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து, வடுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






