ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த எம்ஜிஆரின் 31-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (டிச.24) அனுசரிக்கப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:06 am IST

மறைந்த எம்ஜிஆரின் 31-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (டிச.24) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவாரூரில்...
திருவாரூர் புதுத் தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் நகரத் தலைவர் ஆர்.டி. மூர்த்தி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல், பல்வேறு கட்சியினரும் எம்ஜிஆர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மன்னார்குடியில்...
கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து, அக்கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலர் கா. தமிழ்ச்செல்வம் தலைமையில், கிழக்கு ஒன்றியச் செயலர் தங்க. தமிழ்கண்ணன், ஜெ. பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் குமார், பொதுக் குழு உறுப்பினர் எஸ். கலைவாணன் உள்ளிட்ட அதிமுகவினர் 
நகரின் முக்கிய வீதிகளில் மௌன ஊர்வலமாக வந்து திருப்பாற்கடலில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். 
அமமுக: அமமுக சார்பில், மன்னார்குடி அன்னவாசல் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து கட்சியின் நகர செயலர் ஆ. ஆனந்தராஜ் தலைமையில் கட்சியினர் அமைதி ஊர்வலமாக வந்து தேரடியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதில், அண்ணா தொழிற் சங்க மாநில துணைச் செயலர் சத்தியமூர்த்தி, மாநில தேர்தல் பிரிவுச் செயலர் க. மலர்வேந்தன், மாவட்ட துணைச் செயலர் ஜெ. இளவரசி, ஒன்றியச் செயலர்கள் ரெங்கராஜ் (மன்னார்குடி), எம்.எஸ். சங்கர் (நீடாமங்கலம்),ஜி.கே. அண்ணாதுரை (கோட்டூர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அண்ணா திராவிடர் கழக மாநில பொதுச் செயலர் வி. திவாகரன் தலைமையில், மன்னார்குடி தேரடி காந்தி சிலையிலிருந்து அக்கட்சியினர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக அமைதி ஊர்வலமாக சென்று திருபாற்கடல் தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில், கட்சியின் மாநில அமைப்பாளர் வி.கே. இளந்தமிழன், மாவட்டச் செயலர் டி.என். பாஸ்கர், மண்டல பொறுப்பாளர் சரவணன், மாவட்ட நிர்வாகி கு.பா. அறிவழகன், பொதுக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய நிர்வாகி கோ. காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் நகர அதிமுக சார்பில், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளர்  எல்.எம். முகம்மது  அஷ்ரப்  தலைமையில், அதிமுக நகர செயலாளர் டி.எம். பஷீர் அஹம்மது, துணைச் செயலாளர் எம். உதயகுமார், எம்.ஜி.ஆர். மன்ற நகர செயலாளர் ஆர். ராஜசேகரன், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எஸ்.பி. காளிதாஸ்  உள்ளிட்டோர் கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று, லெட்சுமாங்குடி  பாலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், அமமுக சார்பில், நகர செயலாளர்  டீ.எம். சின்னஅமீன் தலைமையில், இளைஞர் பாசறை நகர செயலாளர் பிரபுதாஸ், மாவட்ட பிரதிநிதி சுரேந்தர் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலத்தில், அக்கட்சியின் ஒன்றியச் செயலர் கோ. அரிகிருஷ்ணன் தலைமையில் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் கே.எஸ். பொன்னுசாமி, வடக்கு ஒன்றிய துணைச்செயலர் ஜனகர், ஒன்றியப் பொருளர் இளங்கோவன், நகர செயலர் ஷாஜஹான் உள்ளிட்டோர், பெரியார் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
அமமுக: இதேபோல், அமமுக சார்பில், நீடாமங்கலம் வடக்கு ஒன்றியச் செயலர் சங்கர் தலைமையில், தெற்கு ஒன்றியச் செயலர் தனபால் உள்ளிட்டோர் அமைதி ஊர்வலமாக தஞ்சை சாலை வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
வலங்கைமானில் அதிமுக ஒன்றியச் செயலர் சங்கர் தலைமையில், ஒன்றிய துணைச் செயலர் இளவரசன், நகர செயலர் குணசேகரன் உள்ளிட்ட அதிமுகவினர் அமைதி ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.