இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தனி நபர்களின் கணினியை கண்காணிக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல்

தனி நபர்கள் பயன்படுத்தும் கணினி மற்றும் செல்லிடப் பேசிகளை கண்காணிக்கும் வகையிலான நடவடிக்கைகளை

Updated On :25 டிசம்பர் 2018, 6:14 am IST

தனி நபர்கள் பயன்படுத்தும் கணினி மற்றும் செல்லிடப் பேசிகளை கண்காணிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜே. அனஸ் நபீல் வெளியிட்ட அறிக்கை:
தனி நபர்கள் பயன்படுத்தும் கணினிகள் மற்றும் செல்லிடப் பேசிகளில் உள்ள தகவல்களை சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் உளவு பார்க்க அரசு விசாரணை முகமைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதை தனி மனித சுதந்திரத்தின் மீதான மத்திய அரசின் தாக்குதலாகவே பார்க்க முடிகிறது.   
இதனால், தங்களின் கணினி மற்றும் செல்லிடப்பேசி தகவல்களும் களவாடப்படுமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் என்று சந்தேகிக்க முகாந்திரம் உள்ளவர்களை உளவு பார்க்க ஏற்கெனவே போதுமான சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில் இந்த சட்டம் தேவையில்லாதது.
எனவே, வரைமுறையில்லாமல் அரசு விசாரணை முகமைகள் குடிமக்களை உளவு பார்க்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதோடு, உடனடியாக இதை திரும்பப்பெற வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.