/

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத் திருத்தத்துக்கு வரவேற்பு

போலி விளம்பரம் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டோரின் நலனுக்கென நுகர்வோர்

Updated On :25 டிசம்பர் 2018, 6:11 am IST

போலி விளம்பரம் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டோரின் நலனுக்கென நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.டி. அண்ணாதுரை, பொதுச் செயலாளர் ஆர். ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் க. திருநாவுக்கரசு ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: 
நுகர்வோர் நலன் காக்க அரசும், தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கங்களும் தமிழ்நாட்டில் விழிப்புணர்வு மற்றும் சட்டரீதியான அணுகுமுறை மூலம் செயல்பட்டு வருகின்றன. வாங்கும் பொருள், பெறும் சேவையில் தரத்தை உறுதி செய்ய நுகர்வோர்களுக்கு உரிமையை உலக அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது. சச்சரவுகளை விரைந்து தீர்க்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எளிமையாக்கப்பட்டு, கட்டணம் இல்லாமல், பாதிக்கப்பட்ட நுகர்வோர் பரிகாரம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  2019-ஆம் ஆண்டு, நுகர்வோர் பாதுகாப்பில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் போலி விளம்பரம், ஆன்லைன் வர்த்தகம் சார்ந்த சச்சரவுகளை தீர்க்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். நுகர்வோர் நலன் காக்க தேசிய அளவில் எழுந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய, புதிய  சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது. 
மத்திய அரசின் இந்த முயற்சியைப் பாராட்டுவதுடன், புது சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று, நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறோம். தரமான பொருள் மற்றும் சேவையை உறுதி செய்ய இந்நாளில் உறுதியேற்போம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.