திருத்துறைப்பூண்டியில் அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி பகுதி பாமணி சொக்கநாதர் தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் மனைவி பத்மா (65). இவர், வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் செல்வதற்காக ரயில்வே கேட் அருகே திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பத்மா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பத்மாவை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் பத்மா உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








