இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாலையை சீரமைக்கக் கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

திருவாரூர் அருகே  தேசிய  நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில்  பிச்சை எடுத்து நெடுஞ்சாலைத் துறைக்கு பணம் அனுப்பும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:36 pm

DIN

திருவாரூர் அருகே  தேசிய  நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில்  பிச்சை எடுத்து நெடுஞ்சாலைத் துறைக்கு பணம் அனுப்பும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 தஞ்சை- திருவாரூர்- நாகை நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதால், அதில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
மேலும், அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு,  சில  நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனால், இந்த  சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், தன்னார்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில்  திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கடைவீதியில் பிச்சை எடுத்து, அந்த பணத்தை நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பும் போராட்டத்தை நடத்தினர். இதன்மூலம் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் லத்தீப் தலைமை வகித்தார்.
 இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.