சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாளை ஜெயலலிதா பிறந்த நாள்: "கோயில்களில் சிறப்பு வழிபாடு'

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு வழிபாடு, நலத் திட்ட உதவிகள்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:24 pm

DIN

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு வழிபாடு, நலத் திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்று திருவாரூர் மாவட்ட அதிமுக செயலரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை அனைத்துக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளிலும் அதிமுக கொடியேற்றி, நோட்டுப் புத்தகங்கள், எழுதுப் பொருள்கள், வேட்டி, சேலை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. மேலும், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும். மேலும், ரத்த தான முகாம் நடைபெற இருக்கிறது.
இதேபோல், வன்மீகபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா அரங்கத்தில் பிப். 26 -இல் 79 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் எனது தலைமையில்  (உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்) செய்து வைக்கப்பட உள்ளது. மணமக்களுக்கு கட்டில், வீட்டு உபயோகப்பொருள்கள் உள்ளிட்ட 70 வகையான சீர்வரிசைகள் வழங்கப்பட இருக்கின்றன.
மாவட்டக் கழகம் சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ள பிறந்த நாள் விழாவில் அனைத்துத் தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.