/

கடலில் மூழ்கிய மீனவர் சடலமாக மீட்பு

முத்துப்பேட்டை அருகே  கடலில் மீன்பிடிக்க சென்று, காணாமல்போன மீனவர் சடலம் புதன்கிழமை கரை ஒதுங்கியது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 1:52 am

DIN

முத்துப்பேட்டை அருகே  கடலில் மீன்பிடிக்க சென்று, காணாமல்போன மீனவர் சடலம் புதன்கிழமை கரை ஒதுங்கியது.
முத்துப்பேட்டை அருகேயுள்ள செங்கங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (42). இவர்அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் கடலில் மீன்பிடிக்க படகில் சென்றார்.
கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, ராட்சத அலையில் சிக்கி ராமச்சந்திரன் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டார். உடன் சென்ற மீனவர்கள் நீண்ட நேரம் தேடியும் ராமச்சந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், லகூன் முகத்துவாரப் பகுதியில் ராமச்சந்திரனின் சடலம் கரை ஒதுங்கியது  புதன்கிழமை தெரியவந்தது. முத்துப்பேட்டை போலீஸார், ராமச்சந்திரனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.