ஆலங்குடி குரு கோயிலில் மாசிமகா குருவார வழிபாடு 

நவகிரக தலங்களில் குரு தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்  கோயிலில் மாசி மகா குருவார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நவகிரக தலங்களில் குரு தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்  கோயிலில் மாசி மகா குருவார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில்  ஆண்டுதோறும் மாசி மாதம் 3-ஆவது வியாழக்கிழமை மாசிமகா குருவார தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மாசிமகா குருவார விழாவையொட்டி, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை , 10 மணிக்கு அபிஷேகம் நண்பகல் 12 மணிக்கு மகாபூர்ணாஹுதி நடைபெற்றது.
தொடர்ந்து, கலங்காமற்காத்த விநாயகர், குரு பகவான், ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர், சுப்பிரமணியசுவாமி சன்னதிகளில் பஞ்சமுக அர்ச்சனை, தீபாராதனையும், மாலையில் குருவார தரிசன வழிபாடும் நடைபெற்றது.
இதையொட்டி, கலங்காமற்காத்த விநாயகர், ஏலவார்குழலியம்மனுக்கு சந்தனக்காப்பு  அலங்காரமும், ஆபத்சகாயேஸ்வரருக்கு வெள்ளி கவசம், குரு பகவானுக்கு தங்க கவசமும் அணிவிக்கப்பட்டிருந்தது. சுப்பிரமணியர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, வெட்டாற்றிலிருந்து யானை மீது புனித நீர்  எடுத்துவரப்பட்டது.
விழா  ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com