தேசிய அறிவியல் தின விநாடி-வினா போட்டி

மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி, ஜேசிஐ மன்னை அமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விநாடி-வினா போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி, ஜேசிஐ மன்னை அமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விநாடி-வினா போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியில், மன்னார்குடி பகுதியிலிருந்து 12 பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 6, 7, 8- ஆம் வகுப்பு ஒரு பிரிவாக, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஒரு பிரிவாக போட்டி நடைபெற்றது. 6, 7, 8-ஆம் வகுப்பு பிரிவில் மன்னார்குடி கோபாலசமுத்திரம் பள்ளி முதலிடமும், வாணி விலாஸ் நடுநிலைப்பள்ளி 2-ஆம் இடமும், அரிச்சப்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 3-ஆம் இடமும் பெற்றது. 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு பிரிவில் நகராட்சி அர்பன் வங்கி மேல்நிலைப்பள்ளி முதலிடம்,தேசிய மேல்நிலைப்பள்ளி 2-ஆம் இடம் பெற்றது. சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ஜேசிஐ மன்னை அமைப்பு சார்பில், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஜேசிஐ மன்னை தலைவர் வி. அஞ்சறைபெட்டி ராஜேஷ் தலைமை வகித்தார். இதில், அமைப்பின் முன்னாள் தலைவர்கள் எஸ். கமலப்பன், ஜி. செல்வகுமார், கோபாலசமுத்திரம் பள்ளித் தலைமையாசிரியர் மா. தேவி, அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடுவர்களாக எஸ். அன்பரசு, எம்.எஸ். ஸ்டீபன்நாதன் ஆகியோர் செயல்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com