தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரயில் பராமரிப்பு ஊர்திகளை முறையாகப் பயன்படுத்தும் திட்டம்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்

ரயில் பராமரிப்பு ஊர்திகளை முறையாகப் பயன்படுத்தும் திட்டத்தை வகுக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப்பொதுச் செயலாளர் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:17 pm

DIN

ரயில் பராமரிப்பு ஊர்திகளை முறையாகப் பயன்படுத்தும் திட்டத்தை வகுக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப்பொதுச் செயலாளர் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை நீடாமங்கலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ரயில் பாதைகளில் அடிக்கடி விலகும் ஜல்லிக் கற்கள் மற்றும் பிடிமான கிளிப்புகளை சரிசெய்யவும், பழுது, காலாவதியான தண்டவாளங்களை சீரமைக்கவும், வெல்டிங் குறைபாடுகளைக் கண்டறியவும், விலகல் கோணங்களை நேர்செய்யவும் 36 வகையான  பராமரிப்பு இயந்திர ஊர்திகளை ரயில்வே கையாள்கிறது.
மொத்தம் 807 ஊர்திகள் உள்ளன. 1,08,706  கி.மீ., நீள தண்டவாளப் பாதையை பராமரிக்க இவை போதுமானதாக இல்லை. ரயில்வே பராமரிப்பு ஊர்திகள் பாதிநேரமே பயன்படுத்தப்படுகின்றன. எனவே புதிதாக  வாங்குவதற்கு முன் முறையாகப் பயன்படுத்தும் திட்டத்தை வகுக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன், ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்துகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.