ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஸ்டாலினின் முதல்வர் கனவு நிறைவேறாது: அமைச்சர் ஆர். காமராஜ்

காலம் கடந்த நிலையில் தற்போது முதல்வராக வேண்டும் என ஸ்டாலின் காணும் கனவு, இனி எந்த காலத்திலும்

Updated On :22 அக்டோபர் 2018, 2:47 am

காலம் கடந்த நிலையில் தற்போது முதல்வராக வேண்டும் என ஸ்டாலின் காணும் கனவு, இனி எந்த காலத்திலும் நிறைவேறாது என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்.
அதிமுகவின் 47-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மன்னார்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சி பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: 
தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் வேண்டுமானால் சிறிது காலம் நான் முதல்வராக இருக்கிறேன் என பதவியை கேட்டு வாங்கி ஸ்டாலின் முதல்வராக இருந்து தனது ஆசையை நிறைவேற்றியிருக்கலாம். 
ஜெயலலிதாவின் தியாகத்துக்காக உழைப்புக்காக தமிழக மக்கள் அதிமுக கட்சியை ஆட்சியில் அமர்த்தி ஜெயலலிதாவை முதல்வராக ஆக்கி நன்றி காட்டினர். அவர் காட்டிய வழியில் தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சியாக தொடர்ந்து வருகிறது. 
இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. காலம் கடந்த நிலையில் முதல்வராக ஆகிவிட வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் கனவு இனி எந்த காலத்திலும் நிறைவேறாது.
 தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மீது திமுக கூறி வரும் குற்றச்சாட்டுகள் வழக்கமானது தான். பிரதான எதிர்க்கட்சியாக இருப்பதால் எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக வழக்குத் தொடுத்து வருகின்றனர். அதை சட்டப்படி சந்தித்து வெற்றி பெறுவோம். தமிழகத்தில் காங்கிரஸ், திமுக தொடங்கி 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மிக குறைந்த ஆண்டுகளே ஆட்சியில் இருந்துள்ளது. கட்சி தொடங்கி 47 ஆண்டுகளில் 27 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதுடன் சரித்திர சாதனை படைத்து வருகிறது அதிமுக என்றார்.  கட்சியின் நகர அவைத் தலைவர் என். சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைமை கழகப் பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ், ஒன்றியச் செயலர்கள் மன்னார்குடி (மே.) கா. தமிழ்ச்செல்வம், (கி.) தங்க. தமிழ்கண்ணன்,(கோட்டூர்) வீ. ஜீவானந்தம், (நீடாமங்கலம்) ஜி. அரிகிருஷ்ணன், ஜெ.பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.