தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கடலோர கிராமங்களில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி

திருவாரூர் மாவட்ட கடலோர கிராமங்களில் செப். 5-ஆம் தேதி மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 

Updated On :3 செப்டம்பர் 2018, 11:31 pm

திருவாரூர் மாவட்ட கடலோர கிராமங்களில் செப். 5-ஆம் தேதி மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களின் சுனாமி முன்னெச்சரிக்கை குறித்த விவரங்களை ஹைதராபாத்தில் உள்ள இந்தியப் பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தெரிவிக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தியப் பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து, ஆந்திரம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலுள்ள கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்ட மாதிரிப் பயிற்சியை செப்.5-ஆம் தேதி நடத்தவுள்ளது. 
சுனாமி வரும் பட்சத்தில், இந்தியப் பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை முன்அறிவிப்புகள் பெறப்படும்போது, அத்தகவல் பரிமாற்றம் அரசுத் துறைகள் மூலம் பாதிப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பதை இந்த ஒத்திகை மூலம் பரிசோதிக்கப்படும். இந்த மாதிரி பயிற்சி ஒத்திகை திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்துக்குள்பட்ட துறைக்காடு- கோவிலான் தோப்பு, தில்லைவிளாகம் - செங்காங்காடு ஆகிய கடலோர கிராமங்களில் நடைபெறுகிறது. மாதிரி ஒத்திகை பயிற்சி என்பதால், இதுகுறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமோ, பீதியோ அடைய தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.