திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த மு.க. ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையான மன்னார்குடியை அடுத்த வடுவூரில் திங்கள்கிழமை திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தால் உடைந்த மதகுகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை பார்வையிட்ட பின்னர், தஞ்சை வழியாக திருக்குவளையில் உள்ள மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் பூர்வீக இல்லத்துக்குச் செல்வதற்காக கார் மூலம் வந்தார். அப்போது, மாவட்ட எல்லையான மன்னார்குடியை அடுத்த வடுவூரில் பிரதான சாலையில் உள்ள அண்ணாசிலை அருகே மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வடுவூருக்கு ஸ்டாலின் வந்தவுடன் ஆளுயர மாலையை கட்சியின் மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் மன்னார்குடி டி.ஆர்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டி பி. ஆடலரசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சித்தமல்லி ந. சோமசுந்தரம், பி. ராஜமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு, நீடாமங்கம் தெற்கு ஒன்றியச் செயலர் வீ. மாயவநாதன், வடக்கு ஒன்றியச் செயலர் விசு. அண்ணாதுரை, மன்னார்குடி மேற்கு ஒன்றியச் செயலர் க. தனராஜ், கோட்டூர் தெற்கு ஒன்றியச் செயலர் வி.எஸ்.ஆர். தேவதாஸ், வடக்கு ஒன்றியச் செயலர் பால. ஞானவேல், மன்னார்குடி நகர செயலர் வீரா. கணேசன் உள்ளிட்ட திரளான திமுகவினர், சார்பு அணி நிர்வாகிகள் நூல்கள், சால்வைகளை ஸ்டாலினுக்கு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்

மயிலாப்பூரில் அமித் ஷா சாலை வலம்!
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

