தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மாற்றுத்திறனாளியை தாக்கியவர் கைது

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மது குடிக்க இடம் தர மறுத்த மாற்றுத்திறனாளியைத் தாக்கியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:25 am

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மது குடிக்க இடம் தர மறுத்த மாற்றுத்திறனாளியைத் தாக்கியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆலங்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரா. பாண்டியன் (55). இவர் சனிக்கிழமை இரவு மது வாங்கிக்கொண்டு, பிரதான சாலையில் உள்ள ரா. மோகன்தாஸ் (60) என்ற மாற்றுத்திறனாளியின் மிதிவண்டி பழுதுபார்க்கும் கடைக்கு வந்தார்.
அங்கு மது குடிக்க முயன்ற அவரை கடையிலிருந்து வெளியேறுமாறு மோகன்தாஸ் கூறினாராம். இதைத்தொடர்ந்து, மோகன்தாஸை பாண்டியன் தாக்கியதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, பாண்டியனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.