திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 186 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
திருவாரூர் மாவட்டத்தில் 186 விநாயகர் சிலைகள் வியாழக்கிழமை வரை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் 186 விநாயகர் சிலைகள் வியாழக்கிழமை வரை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியின்போது, பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் ஓரிரு நாள்களில் நீர் நிலைகளில் கரைக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் 272 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 186 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
திருவாரூர் ஒன்றியப் பகுதிகளில் 15 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் ராதாநஞ்சை பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சந்தன நதியிலும், குன்னியூர் பகுதி சிலைகள் பாண்டவையாற்றிலும், மாங்குடி, வடகரை பகுதி சிலைகள் வெள்ளையாற்றிலும், புலிவலம் பகுதி சிலைகள் வாழவாய்க்காலிலும், கீழகூத்தங்குடி பகுதி சிலைகள் காட்டாற்றிலும், அலிவலம் பகுதி சிலைகள் கடுவையாற்றிலும் வியாழக்கிழமை இரவு கரைக்கப்பட்டன. திருவாரூர் நகர பகுதியில் 37 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகள் செப். 15 -ஆம் தேதி கரைக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







