புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

18 எம்எல்ஏக்கள் குறித்த தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி மாற்றம்

சட்டப் பேரவை உறுப்பினர்கள் குறித்த தீர்ப்பு வெளி வந்தவுடன் தமிழகத்தில்ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் அமமுக கர்நாடக மாநிலப் பொறுப்பாளர் புகழேந்தி. 

Published On :

சட்டப் பேரவை உறுப்பினர்கள் குறித்த தீர்ப்பு வெளி வந்தவுடன் தமிழகத்தில்ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் அமமுக கர்நாடக மாநிலப் பொறுப்பாளர் புகழேந்தி. 
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் நேரடியாக சண்டை தொடங்கவிட்டது. அந்த சண்டை முற்றி ஓ. பன்னீர்செல்வம் வெளியில் வருவார். அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவியிடம் 70 எம்.எல்.ஏ.க்கள், 10 அமைச்சர்கள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் , ஜெயக்குமார் உள்ளிட்ட 6 அமைச்சர்களைத் தவிர மற்றவர்கள் எங்களிடம் தான் உள்ளனர். 18 எம்.எல்.ஏ.க்களுக்கான தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அடுத்த தமிழக முதல்வர் அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் என்பது உறுதி. 
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லாததால், பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு காரணம் முறையாக தூர்வாராததே. மேலும், தூர்வாருவதில் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. தமிழகத்தில் நீர்நிலைகள் முறையாக தூர்வாராததால் விவசாயம் பாதித்து தண்ணீர்  கடலில் கலந்ததை கர்நாடக விவசாயிகள், தலைவர்கள்  விமர்சிக்கும் நிலை  உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அங்கு சென்று ஆறுதல் கூறவில்லை. நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் இல்லத்துக்குச் சென்று ஆறுதல் கூறவில்லை. ஆனால், முக்கொம்பு அணை உடைந்தபோது முதல்வர் அங்கு வந்ததற்கு காரணம் டெல்டா பகுதி விவசாயிகள் மீது பாசமல்ல பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் பணிகளில் வரும் கமிஷன்தான் காரணம். முறையான கமிஷன் வராததால் முக்கொம்பு அணை பணிகள் தொடங்கவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டணை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. இதற்கான தீர்மானத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் கொண்டு வந்தார். எனவே, தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தாமல் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.