பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்பு!
பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற இளைஞரைக் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.

காவல்துறையினர் சுட்டுப்பிடித்த பிரகாஷ்.
பொன்னேரியில் மருத்துவமனை ஊழியர் ராஜேஸ்வரியை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற பிரகாஷ் என்ற இளைஞரைக் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியில் இருந்தவர் ராஜேஸ்வரி (35). இவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றார். இந்தச் சம்பவத்தில் 85% தீக்காயங்களுடன் ராஜேஸ்வரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரகாஷ், பெருஞ்சேரி மயான பூமி அருகே பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

பட்டாக்கத்தியால் வெட்டப்பட்டதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் தமிழரசன்.
இதையடுத்து பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் தமிழரசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷை பிடிக்க முயன்றனர்.
அப்போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற பிரகாஷ், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் உதவி ஆய்வாளர் தமிழரசனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் உதவி ஆய்வாளர் தமிழரசனின் இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து தற்காப்புக்காக பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் துப்பாக்கியால் பிரகாஷின் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரகாஷ் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கத்தியால் வெட்டப்பட்ட உதவி ஆய்வாளர் தமிழரசனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக, ராஜேஸ்வரி தொடர்ந்து பணிக்கு வரும்போது அவரிடம் பணம் கேட்டு பிரகாஷ் மிரட்டி வந்ததாக போலீசார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Summary
In Ponneri, the police shot and apprehended a young man named Prakash, who had attempted to kill a hospital employee named Rajeshwari by dousing her with petrol.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



