கூத்தாநல்லூரில் தமிழக அரசின் நலத்திட்ட உதவியாக 101 பயனாளிகளுக்கு 5,050 விலையில்லா கோழிக்குஞ்சுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மன்னார்குடி கால்நடை உதவி இயக்குநர்ஜான்சன் சார்லஸ் ஆலோசனையின் பேரில், கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி கால்நடை மருத்துவமனையில் இந்நிகழ்ச்சி
நடைபெற்றது.
தமிழக அரசின் புறக்கடை கோழி வளர்ப்போர் திட்டத்தின் கீழ் 101 பயனாளிகளுக்கு, நாட்டுக் கோழிக் குஞ்சுகளை கால்நடை மருத்துவர்கள் லெட்சுமாங்குடி எம். மகேந்திரன், பொதக்குடி எஸ்.பிரவின், அரிச்சந்திரபுரம் மா.தேவி உள்ளிட்ட மருத்துவர்கள் வழங்கினர்.
இதுகுறித்து, கால்நடை உதவி இயக்குநர் ஜான்சன் சார்லஸ் கூறியது: லெட்சுமாங்குடி, திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, கொத்தங்குடி, ஓவர்ச்சேரி, பொதக்குடி, அதங்குடி, சித்தாம்பூர், ஆய்க்குடி, மேல வழந்தாஞ்சேரி, கீழ வழந்தாஞ்சேரி, அரிச்சபுரம், வேட்டைத்திடல், அரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், பழையனூர், திட்டச்சேரி, பாலக்குறிச்சி, சித்திரையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 101 பயனாளிகளுக்கு ரூ. 3, 500 மதிப்பில் தலா 50 கோழிக் குஞ்சுகள் வீதம் ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 500 மதிப்பிலான 5,050 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, கோழிக்கான கூண்டு செய்வதற்கு தலா ரூ. 2,500 வீதம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும், அவர்களுக்கு கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


