இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

"அரசின் நிதியுதவியை அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்'

அமைப்பு சாரா மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தினருக்கு

Updated On :25 பிப்ரவரி 2019, 6:32 am IST

அமைப்பு சாரா மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கும் ரூ. 2 ஆயிரம் நிதியுதவியை அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
இதுகுறித்து, அச்சங்க மாநிலச் செயலர் அ. பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தொடர்ந்து, வறட்சியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கக் கோரி சங்க மாநில நிர்வாகிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலருமான இரா. முத்தரசன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அமைச்சர்கள் பரிசீலிப்பதாக கூறினர். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் கோரி தமிழகம் முழுவதும் காத்திருக்கும் போராட்டம், கண்ணீர் தீபாவளி கொண்டாடும் வகையில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கண்டனத்தை தெரிவித்தோம். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை உதவித்தொகை கோரி அரசுக்கு  கோரிக்கை வைத்தும், கண்டுக்கொள்ளாத நிலையில் தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தினோம். மக்களவை தேர்தல் வருவதால் தமிழக முதல்வர் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின்கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப்புற மற்றும் நகரப்புற ஏழைகள் 60 லட்சம் பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் நிதி வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.
 தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் மக்கள் நிலை ஆய்வு கணக்கெடுப்பு மூலம் ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களின் தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இதற்காக பயன்படுத்தப்படும் எனவும், நகர்ப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ள குடும்பங்களின் புள்ளி விவரங்கள் இதற்கு பயன்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  வறுமைக் கோடு பட்டியல் என்பது 2003-இல் எடுக்கப்பட்டது. அதில் வசதி படைத்தவர்கள் பட்டியலில்  இடம் பெற்றும், ஏழை எளிய குடும்பங்கள் விடுபட்டும் உள்ளது. 2011-இல் பட்டியல் சரிபார்க்கப்பட்டும் இந்நிலை தொடர்கிறது. மேலும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களின் எண்ணிக்கை  கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், வறுமை கோட்டுக்குகீழ் உள்ள பட்டியலில் இவர்களது பெயர்கள் விடுபட்டுள்ளன. விடுபட்டுள்ள குடும்பங்களின் பெயர்களையும் இணைத்து தமிழக அரசு அறிவித்துள்ள உதவித்தொகையை வழங்க வேண்டுமென தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 
இதுதேர்தலுக்கான அறிவிப்பாக இல்லாமல் வறுமை கோட்டுக்குகீழ் உள்ள குடும்பங்களுக்கு பண்டிகை கால உதவித் தொகையாக ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.