நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ராணுவ வீரர்களுக்கு மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

Updated On :26 பிப்ரவரி 2019, 1:29 am IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மன்னார்குடி அருகே பள்ளி மாணவர் சனிக்கிழமை மரக்கன்றுகளை நட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா எனும் இடத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் பயணித்த வாகனம் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோத செய்து தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர்  உள்பட்ட 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெகதீசன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதை, பள்ளித் தலைமையாசிரியர் அமுதா, ஆசிரியர்கள் மணி. கணேசன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.