திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் அண்மையில் வாசகசாலை அமைப்பு சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில், எழுத்தாளர் தமிழ்பிரபா எழுதிய பேட்ட நாவல் குறித்து கவிஞர் விகடபாரதியும், வாசகர் சார்பில் ப. கெளசல்யாவும் பேசினார். இதில், குடவாசல் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர், நேதாஜி கல்லூரி துணை முதல்வர் அறிவழகன் மற்றும் தமிழ்க்காவலன், ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசகசாலை ஒருங்கிணைப்பாளர் நரேன், நூலக வாசகர் வட்டத் தலைவர் குரு. சந்திரசேகரன், நூலகர்கள் வடிவேலு, மா. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








