தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திருவாரூர் அருகேயுள்ள திருக்காரவாசலில் மார்க்சிஸ்ட்

Updated On :23 ஜனவரி 2019, 5:45 am IST

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திருவாரூர் அருகேயுள்ள திருக்காரவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் தொடங்கி ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலமாக ஷேல் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு சர்வதேச ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதைக் கண்டித்தும், திட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் திருக்காரவாசல் ஊராட்சி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, திருக்காரவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம்  அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. ரங்கசாமி, பி.ஆர். சாமியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் என். இடும்பையன், மாதர் சங்க மாவட்டச் செயலர் பா. கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.