குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சாலை மறியல்: 2,100 பேர் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த கோருதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி

Updated On :24 ஜனவரி 2019, 1:32 am IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த கோருதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக புதன்கிழமை ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், 2,100 பேர் கைது செய்யப்பட்டனர்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், ஏழாவது ஊதியக்குழு நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும், தொகுப்பூதிய முறையை ரத்து செய்து பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும், தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும், அங்கன்வாடி பள்ளிகளுக்குக் கற்பித்தல் பணிகளுக்காக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாமல், இடைநிலை ஆசிரியர்களைக் கட்டாய மாறுதல் செய்வதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்- அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
2- ஆவது நாளாக புதன்கிழமை திருவாரூர் மாவட்டத்தில், 7 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 
திருவாரூரில்... திருவாரூரில் புதிய ரயில் நிலையத்திலிருந்து பேரணியாக வந்து பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி. சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 173 பெண்கள் உள்பட 363 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டியில்... திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டக்கு, நிர்வாகிகள் கே. சுந்தரமூர்த்தி, எம். மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து பேசினார். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்
பட்டனர். 
குடவாசலில்... குடவாசல் அருகே உள்ள ஓகையில் நடைபெற்ற மறியலுக்கு, ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் பெ. ரவி, ஆர். உமாநாத், சி. சுந்தரலிங்கம், எம். ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மீனாட்சிசுந்தரம் பங்கேற்று, போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். 325 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர். 


515 பேர் கைது 
மன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை அருகே ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் பேரணியாகச் சென்றனர். பேரணிக்கு, ஒருங்கிணைப்பாளர்கள் வி. சின்னையன், அ. முரளி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர்களை காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன் தலைமையில் போலீஸார் தடுத்து நிறுத்தியதால், அதே இடத்தில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 515 பேரை போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

300 பேர் கைது
நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அதன் ஒருங்கிணைப்பாளர் குரு. செல்வமணி தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் நா. கதிரவன், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஈ.வெ.ரா. உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவரையும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்று மாலையில் விடுவித்தனர். மறியல் காரணமாக நீடாமங்கலம்- கும்பகோணம், நீடாமங்கலம்- நாகப்பட்டினம் சாலையில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், நீடாமங்கலம் காவல் ஆய்வாளர்  பழனிசாமி மேற்பார்வையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வலங்கைமானில்...
வலங்கைமானில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, போராட்டக்குழு உறுப்பினர் புஷ்பநாதன் தலைமை வகித்தார். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 313 பேர் கைதாகி, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அலுவல் பணிகள் பாதிப்பு
நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நன்னிலம்- கும்பகோணம் சாலையில், ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் கே. ராஜசேகரன், கே. அருள், ஜி. மணிகண்டன், ஜே. பிரகாஷ் ஆகியோர் தலைமையில், 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 225 பேரை போலீஸார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
வேலைநிறுத்தம் காரணமாக நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகம் போன்ற அலுவலகப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.